தாயக மக்களுக்கு புலம்பெயர் உறவுகளின் உதவி...
நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் சிறு உதவியேனும் புரிதல் என்பது வரமாகும்.
அந்தவகையில் இன்றையதினம் (20.10.2021) இந்திராணி தங்கராஜா அவர்களின் நினைவாக அதிக அங்கத்தவர் கொண்ட முள்ளியவளை பூந்தனை சேர்ந்த பெண்தலைமை குடும்பத்திற்கு அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக எமது அமைப்பின் ஊடாக விவசாயம் செய்ய ஊக்குவிக்கும் முகமாக நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றும் அதற்குரிய சில பொருட்களும் கனடா UAHF அமைப்பினூடாக வழங்கி வைக்கப்பட்டது . எமக்கு உறுதுணையாக இருந்த கொடையாளிகளிற்கும் நிர்வாகத்தினரிற்கும் மற்றும் எமக்கு பக்க பலமாக இருக்கும் நல்லுள்ளங்களிற்கும் எமது அமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.